தீர்மானத்தின் நேரம் 59-06-11 1. நன்றி, சகோதரனே. உங்களுக்கு நன்றி. இப்பொழுது நாம் சற்று நேரம் ஜெபத்தில் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. கர்த்தாவே, நாங்கள் இங்கே சிகாகோவிலுள்ள இந்த பிலதெல்பியா சபையில் கூடி வந்திருக்கும் இந்த மேலான ஐக்கியத்தின் வேளைக்காக நாங்கள் நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம், உமக்கு கனத்தையும் மரியாதையையும் செலுத்தவும், எங்களுடைய முழு இருதயத்தோடும் உம்மை ஆராதிக்கவுமே அல்லாமல் வேறெந்த காரணத்திற்காகவும் நாங்கள் கூடி வரவில்லை. கர்த்தாவே, நீர் இன்றிரவு மிகவும் விசேஷமான வழியில் எங்களை சந்திக்க வேண்டுமென்றும், எங்கள் இருதயத்தின் வாஞ்சையானது, உம்முடைய சித்தமாக இருக்குமானால், அதை எங்களுக்கு அருளவும் வேண்டுமென்று நாங்கள் கேட்கிறோம், கர்த்தாவே. நாங்கள் உமக்கு முன்பாக உத்தமமாக நடந்தால், எந்த நன்மையானதையும் நீர் எங்களுக்கு அருளாமல் இருக்க மாட்டீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். ஆகவே, எங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்பதே இன்றிரவு உம்முடைய சித்தமாக இருக்கும் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். இந்த கன்வென்சனுக்கு வந்து, இங்கே இந்த ஆராதனையில் இருக்கும் ஊழியக்காரர்களுக்காக நாங்கள் விசேஷமான ஆசீர்வாதங்களைக் கேட்கிறோம். அவர்கள் நற்காரியங்களால் நிறைந்து, ஒரு புது தொடக்கத்துடனும், ஒரு புதிய நோக்குடனும், தேவனுடைய வேலையிலும், தேவசித்தத்திலும் தேவனிடமிருந்து ஒரு புதிய தரிசனத்துடனும் வீட்டிற்கு செல்ல வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். 2. கர்த்தாவே, நீர் இன்றிரவு வியாதியஸ்தரையும் கூட நினைவுகூர வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம், தேவை இருக்கும் அனேகர் இருக்கின்றனர், அவர்கள் தொடர்ந்து (ஜீவிக்க) உம்மிடத்திலிருந்து ஒரு தொடுதல் கட்டாயமாக அவசியமாய் உள்ளது, பிரத்தியேகமாக இன்றிரவு மிக மிக மோசமாக வியாதியுற்றிருந்து மருத்துவமனைகளில் இருந்தும் தேசத்தைச் சுற்றிலுமிருந்தும் அழைப்பவர்கள்.., நாங்கள் அவர்களுக்காக ஜெபிக்கிறோம். அக்கறை கொள்ள வேண்டிய அந்த வழியில் இன்னும் இல்லாதவர்களுக்காக நாங்கள் வேண்டிக் கொள்கிறோம். அவர்கள், “ஆம், கர்த்தாவே, நான் அவர்களுடைய வரிசைகளில் சேர்ந்து கொள்ளட்டும்,” என்று கூறும் வேளையாக இது இருப்பதாக. அவர்கள் தங்களைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாரமான யாவற்றையும் தள்ளி விட்டு, விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற கர்த்தராகிய இயேசுவை நோக்கி, அவர்களுக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு ஓடுவார்களாக. கர்த்தாவே, எனக்குதவி செய்யும், நான் இன்றிரவு களைப்பாய் இருக்கிறேன். உம்முடைய இரக்கங்கள் உமது ஊழியக்காரனிடம் கூட்டப்பட வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். நீங்கள் உட்காரலாம். 3. சரி. நான் சுவிசேஷத்தைப் பேசும்படியாக கிறிஸ்துவின் இரத்தத்தினால் கிரயம் கொடுத்து வாங்கப்பட்டவர்களுக்கு முன்பாக நின்று கொண்டிருக்கும்படியான சிலாக்கியத்தைக் கொண்டிருக்கையில், இதை என்னுடைய ஜீவியத்தின் மிக மகத்தான வேளைகளில் ஒன்றாக நான் கருதுகிறேன். எனவே, நாம் இப்படிப்பட்ட இதைப் போன்ற ஒரு சபையாரிடத்தில் பேச வரும்போது, நான் பயபக்தியோடும், விவேகத்தோடும், கருத்தூன்றி கவனித்தும், தேவ பயத்தோடும் வரும்படி விரும்புகிறேன்; இங்கே ஏறக்குறைய ஆயிரம் ஜனங்கள் இருப்பார்கள் என நான் யூகிக்கிறேன். அவர்களில் அநேகர் இரத்தத்தினால் கழுவப்பட்ட பரிசுத்தவான்கள். என்ன செய்யலாம் என்று ஒரு தீர்மானத்தைச் செய்ய முயற்சித்துக் கொண்டு இருப்பவர்கள் ஒருக்கால் இங்கே இருக்கலாம். எனவே நாம் தாமே எல்லாரும் நிச்சயமாகவே கிறிஸ்தவர்களைப் போன்று நடந்து கொள்ள வேண்டுமென்பதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். நாம் எல்லா மனிதராலும் வாசிக்கப்படும் தேவனுடைய எழுதப்பட்ட நிரூபங்களாக இருக்கிறோம் என்பது நமக்குத் தெரியும். 4. இப்பொழுது, நாளை இரவில், நாம் ஒரு சுகமளிக்கிற ஆராதனையைக் கொண்டு இருக்கப் போகிறோம், அதற்காக அது கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சுகமளிக்கிற ஆராதனை என்று நம்மால் கூற முடியும் என்பதல்ல அது, ஆனால் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பது தான். சபை ஜனங்களின் சிந்தைகளில் அல்ல, ஆனால் நம்மால் சுகமளிக்க முடியாது என்று வெளியில் உள்ளவர்களுடைய சிந்தைகளுக்குள் என்னால் அதைப் புரிய வைக்க ஒரு போதும் முடியவில்லை. நான் ஒருக்காலும் யாரையும் சுகப்படுத்தினதில்லை. நான் ஒரு போதும் அதைச் செய்யவே மாட்டேன். ஆனால் நான் ஜெபத்திற்கு சில உண்மையான நேரடியான பதில்களைப் பெற்றிருந்தேன். நான் அநேக தடவைகள் ஜெபித்த ஜெபத்தை தேவன் கனப்படுத்தினது உண்டு. அதைத் தான் நாம் நாளை இரவு வியாதியஸ்தர்களுக் காகச் செய்ய விரும்புகிறோம். நான் இன்று சிறிது சம்பாஷணையைக் கொண்டிருந்தேன். என்னால் அப்படியே அதனூடாக தொடர்ந்து நீண்ட நேரம் பேச முடியவில்லை. என்னுடைய மனச்சாட்சி என்னைக் குற்றப்படுத்திக் கொண்டேயிருந்தது. நான் சகோதரன் கிரான்ட்டிடம் பேச வேண்டியிருந்தது. எனக்கு சகோதரன் கிராண்ட் அவர்களை மிக நன்றாகத் தெரியாது, ஆனால் அவர் உண்மையான கிறிஸ்தவ பண்பாளராகவும், சாதுவானவராகவும் இருப்பதாக நான் நினைத்தபடியே அம்மாதிரியான மனிதராக நான் அவரைக் கண்டு கொண்டேன். ஆனால் அன்றொரு இரவில், அவர் கன்வென்சனில் இருந்தார் என்பது கூடத் தெரியாமல், நான் மேடையிலிருந்து பேசி, “நாம் எப்போதுமே ஒரு இரவில் சுகமளித்தலையே செய்கிறோம். நான் பேசும்படி அழைக்கப்பட்டிருந்தேன், ஆனால் நாம் ஒரு இரவில் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கலாம். நாம் அதை வெள்ளிக் கிழமை இரவு செய்யலாம்,” என்றேன். இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் சகோ.கிரான்ட் அவர்கள், ஒரு பரிசுத்த ஆவி கூட்டத்திற்கு அவரால் ஒரு இரவு கொடுக்கப்படும் என்று ஏற்கனவே விளம்பரப்படுத்தியிருந்தார். இருப்பினும், அது ஏற்கனவே புரிந்து கொள்ளப்பட்டு, சகோ.கிரான்ட் அவர்களால் நன்கு சிந்திக்கப்பட்டு விட்டதென்று சகோ.ஜோசப் அவர்கள் என்னிடம் கூறினார்கள். ஆனால் எனக்கு அது தெரியாது என்று நான் தானே அவரிடம் கூற வேண்டியிருந்தது என்பதை நான் உணர்ந்தேன். சகோ.கிரான்ட் அவர்கள் என்னவொரு அருமையான மனிதராக இருக்கிறார் என்பதை நான் கண்டு கொண்டேன். அவர் தம்முடைய சொந்த கூட்டங்களில் பெருங் கூட்ட ஜனங்களைக் கூட்டி, வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும்படி, வியாதிப்பட்ட ஜனங்களுக்காக அதைக் கொடுக்க விரும்பினார். மிகவும் தாழ்மையான சகோதரனாகிய கிரான்ட் தாமே வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும்படி தேவனால் பயன்படுத்தப்பட்டு வருகிறார். அவர் விசுவாசமுள்ள மகத்தான ஒரு மனிதர். ஆனால் அவர் ஒரு தடவை அப்படியே நீண்ட நேரம் ஆராதனையில் தங்கினார். அது ஏறக்குறைய அவரைக் கொன்று போட்டது. பலவீனமும் நரம்புக் கோளாறும். ஏறக்குறைய முழுவதும் மனக்கலக்கத்திற்கு உள்ளான ஒரு நிலைமை. 5. சகோ.டாமி ஹிக்ஸ் அவர்கள் தம்முடைய பலத்துக்கு மிஞ்சி மிகக்கடுமையாக உழைத்ததன் விளைவாக, அவருக்கு ஒரு மாரடைப்பு ஏற்பட்டதாக நான் கேள்விப் பட்டேன். ஓ, நான் அன்றொரு இரவில் கூறினபடி-? தேவனுடைய ஜனங்களுக்கு ஒரு சூரைச்செடி, இளைப்பாறுதல் அவசியமாயுள்ளது. நாம் அப்படியே கர்த்தருக்குக் காத்திருந்து, நாம் அவருக்குக் காத்திருக்கையில், நம்முடைய பெலனைப் புதுப்பித்துக் கொள்வோமாக. அவை எல்லாவற்றையும் செய்து விட முயற்சிக்க வேண்டாம். நான் உட்காருவதற்கு முன்பாக வருகிற ஒவ்வொருவருக்காகவும் நான் ஜெபிக்கும்படி தீர்மானித்து, ஏழு நாட்கள் பகலும் இரவும் ஜெப வரிசையில் தரித்திருந்து, என்னுடைய ஆகாரத்தை பிரசங்க மேடையிலேயே சாப்பிட்டதை நான் நினைவுகூருகிறேன். அங்கே நான் தொடங்கின போது இருந்ததைக் காட்டிலும் கடந்த இரவு பத்து மடங்கு அதிகமாக இருந்தது. அப்போது நான் ஏறக்குறைய மரித்தே போய் விட்டேன். என்னால் தூங்க முடியவில்லை, நான் எங்கே இருந்தேன் என்பதை அறிவதே கடினமாக இருந்தது, நான் மிகவும் களைப்பாகவும் சோர்வுற்ற நிலையிலும் இருந்தேன். அவ்வாறு கஷ்டப்பட வேண்டாம். நாம் அவ்வாறு செய்வதை இயேசு விரும்புவதில்லை. நாம் நம்மைப் பேணி பாதுகாக்கவே அவர் விரும்புகிறார்... 6. அந்தத் தரிசனங்கள் எனக்கு என்ன செய்கிறது என்பதை யாருமே ஒருபோதும் அறிவதில்லை. அவைகள் எனக்கு மிகவும் கடினமாக உள்ளன. அது அப்படியே ஒன்று இருக்க முடிந்தால், அப்போது அவர்களில் மீதமுள்ளவர்கள் சுகமடைந்து விடுவார்கள். ஆனால் நீங்கள்... அது ஒன்றாக இருக்கிறது, அது எல்லாமுமாக இருக்க வேண்டியுள்ளது, அல்லது அவர்கள் அப்படியே அதை விசுவாசிக்க விரும்புவதில்லை. எனவே சபையானது இன்னும் அதனுடைய சரியான நிலையில் இல்லை. நாம் அதை நினைவில் கொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறோம். அது முதிர்ச்சி அடையவில்லை. எனவே நாம் அப்படியே அதை வழக்கத்தை விட அதிக நேரம் செய்யவும், நம்மால் முடிந்த சிறந்ததைச் செய்யவும் வேண்டியுள்ளது. நாம் பரிசுத்த ஆவியைக் கவனிக்கையில், பரிசுத்த ஆவியைக் கொண்டு மட்டுமே அல்லாமல், வேறு யாரைக் கொண்டும் அதை முதிர்ச்சியடையும் நிலைக்கு கொண்டு வர முடியாது. அது எப்பொழுதாவது மனுஷனால் வரும் என்று நான் நம்புவதில்லை, அது தேவனாலே வர வேண்டியதாயுள்ளது. 7. ஆனால் கர்த்தருக்குச் சித்தமானால், நாம் நாளை இரவில், வியாதியஸ்தர் களுக்காக ஜெபிக்கப் போகிறோம். நான் என் மகனாகிய பில்லியை அனுப்புவேன். அவன் வரவில்லை என்றால், அப்போது ஜீனோ, அல்லது லியோவோ, ஒருவரோ அல்லது சகோ.சாத்மனோ ஜெப அட்டைகளை விநியோகிப்பார்கள். கனடாவில் இருந்து வந்திருக்கும் அவர் அங்கே பின்னால் இருப்பதை நான் காண்கிறேன். அவர் இந்தக் கன்வென்சனில் நம்மோடு இருக்கிறார். அவர்களில் சிலர் நாளை இரவு சுமார் 6 மணிக்கு ஜெப அட்டைகளை விநியோகிப்பார்கள், எனவே அது எஞ்சிய ஆராதனையில் குறுக்கிடாது. பிறகு, என்னுடைய விலையேறப்பெற்ற நண்பராகிய சகோ.ஆஸ்பார்ன் அவர்கள், இங்கே இந்தப் பட்டணத்தில், சனிக்கிழமை இரவில், காட்டும்படியாக தம்முடைய படக்காட்சியை வைத்திருக்கிறதாக, நான் வந்தது முதற்கொண்டு எனக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அது இங்கே அறிவிக்கப்பட்டிருக்கும் என்று நான் யூகிக்கிறேன். அது சனிக்கிழமை இரவில் இந்தக் குறிப்பிட்ட திரை அரங்கிலோ, அல்லது பள்ளியின் அரங்கிலோ காட்டப்படும். நீங்கள் அனைவரும் சென்று அதைப் பார்க்கும்படி நான் கேட்டுக் கொள்கிறேன். டாமி ஆஸ்பார்ன் அவர்கள் நான் எப்பொழுதும் சந்தித்ததிலேயே மிகவும் அருமையான கிறிஸ்தவ பண்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் மெய்யாகவே கிறிஸ்துவின் உண்மையான ஒரு ஊழியக்காரர் ஆவார். அவர் பேரில் பெரும் மரியாதையும் அன்பும் எனக்குண்டு. 8. நான் இங்கே இப்பட்டணத்தில் இருந்து, நான்--நான்--நான் அப்படக்காட்சியை காண்பதற்காக ஞாயிறு பிற்பகலில் நானே போக விரும்புகிறேன். ஆனால் நாளை இரவில், நான் அநேக அநேக மைல்களுக்கு அப்பால் வேறொரு சபைக்குப் போகிறேன். நான் கூற நினைத்தது சனிக்கிழமை இரவு. ஒரு சிறு ஆராதனைக்காக மற்றொரு சபைக்குப் போகிறேன். ஒருக்கால் வெறுமனே ஒரு சிறு செய்தியைப் பிரசங்கித்து விட்டு, திரும்பி வந்து விடுவேன், ஏனென்றால் அது ஒரு குறுகிய அல்லது சிறு சபையாகும். அங்கே அநேகர் உள்ளே வர முடியாது. அது இந்தச் சபையுடன் தொடர்பு உடையது. பிறகு ஞாயிறு பிற்பகலில், நானே அந்தப் படக்காட்சியைப் பார்க்கும்படியாக திட்டமிட்டுள்ளேன். அதன் பிறகு, ஞாயிறு இரவில், வேறொரு ஆராதனை இருக்கிறது. கர்த்தருக்குச் சித்தமானால், நாம் மீண்டுமாக அந்த ஆராதனையில் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கலாம். இங்கேயிருக்கும் உங்கள் மேய்ப்பர் இன்று காலையில் என்னிடம் கூறினார், நாங்கள் பேசிக் கொண்டிருந்தபடி, ஞாயிறு இரவு அந்த அரங்கில்... அவர் அவ்வளவு ஒரு தீரமான ஆவியைக் கொண்டிருந்தார். நாங்கள் இப்பட்டணத்தில் வியாதியஸ்தருக்காக ஜெபித்துக் கொண்டிருந்த சமயத்தில், இந்த பிலதெல்பியா சபையில் அவர்கள் ஆராதனைகளைக் கொண்டிருக்காமல், அவர்கள் இந்த சபையை மூடியிருந்ததாக அவர் கூறினார். அது மிகவும் துணிச்சலான காரியமாகும். இந்தக் காலையில் அதை என்னிடம் கூறின நம்முடைய சகோ.ஈட் அவர்களுக்காக (Brother Ead), அதற்காக நாங்கள் நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். 9. சனிக்கிழமை காலையில், கிறிஸ்தவ வியாபாரிகளின் காலை உணவு கூட்டம் இருக்கிறது. அது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று நான் யூகிக்கிறேன். அது-அது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிறகு நாளை காலையில் ஊழியக்காரர்களுக்கான ஒரு காலை உணவு கூட்டமும் இருக்கிறதென்று நினைக்கிறேன். அது ஏழு அங்காடியில் (Seven Plaza) நடைபெறும். கிறிஸ்தவ வியாபாரிகளுடையதா-? எட்ஜ்வாட்டர் பீச்சில். எனவே இந்த இரண்டு ஆராதனைகளிலுமே நான் பேச வேண்டியிருக்கும் என்று நான் நம்புகிறேன். எனவே வார்த்தையின் வாசிப்பில் கர்த்தருடைய ஆசீர்வாதங்களை நாம் கேட்கையில், கர்த்தர் இப்பொழுது உங்களை ஆசீர்வதிப்பாராக, அவர் இன்றிரவில் தமது ஆவியை நமக்கு அருளுவாராக. இப்பொழுது, இந்த நாளின் ஒவ்வொரு சிறு கவலையையும் மனக்கலக்கத்தையும் நாம் தூர தள்ளி விடுவோமாக. மிகவும் களைப்பான ஒரு நிலையில் அல்ல, ஒவ்வொன்றையும் தள்ளி விட்டு, இப்பொழுது அடுத்த முப்பது அல்லது நாற்பது நிமிடங்களுக்கு அவரையே நோக்கிப் பார்ப்போமாக. கர்த்தாவே, நாங்கள் ஜீவிக்கிற வார்த்தையையும் அந்த எழுதப்பட்ட வார்த்தை யையும் கொண்டிருப்பதற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இவர்கள் ஒருவர் மற்றவரோடு நற்சாட்சியைக் காத்து நடக்கின்றனர். நாங்கள் இந்த ஆசீர்வதிக்கப் பட்ட வேதாகமத்தை வாசிக்கும் போது, அது எங்களை உறுதியாக இளைப்பாறும்படி செய்கிறது, அது எங்களுக்கு ஒரு சவாலாக உள்ளது. அதை எழுதினவர் இங்கே பிரசன்னமாய் இருக்கிறார் என்றும், ஒவ்வொரு வார்த்தையையும் உண்மையாகவும் சரியாகவும் ஆக்குவதற்காக எப்பொழுதும் இங்கு பிரசன்னராய் இருக்கிறார் என்றும் நாங்கள் அறிவோம். எனவே இன்றிரவு ஜனங்களுடைய இருதயங்கள் பரிசுத்த ஆவியைக் கொண்டு வார்த்தையை ஆழமாகப் புரிந்து கொள்ளட்டும். அறிக்கை இடுதலினாலும், மனந்திரும்புதலினாலும் அதற்கு தண்ணீர் ஊற்றி, அது இரட்சிப்பின் மகத்தான விருட்சங்களாக வளர்ந்து, மூர்க்கமான மனிதரும் ஸ்திரீகளும் அதன் கிளைகளின் கீழே வந்து அமர்ந்து, தங்களுடைய ஆத்துமாக்களை இளைப்பாறப் பண்ணுவார்களாக. நீரே மகிமையைப் பெற்றுக் கொள்ளும், நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 10. நான் இன்றிரவு “தீர்மானத்தின் நேரம்,” என்று அழைக்கப்படும் ஒரு பாடத்தைப் போதிக்க விரும்புகிறேன். நான் ஆதியாகமம் 24:58-லிருந்து வெறுமனே ஒரு வசனத்தை வாசிக்க விரும்புகிறேன். ரெபெக்காளை அழைத்து: நீ இந்த மனிதனோடேகூடப் போகிறாயா என்று கேட்டார்கள். அவள்: போகிறேன் என்றாள். நாம் தீர்மானங்களைச் செய்யும்படி நிர்பந்திக்கப்படுகிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். நாம் “ஆம்” அல்லது “இல்லை” என்று கூற வேண்டியதான நிலைக்கு நாம் வர வேண்டிய நேரங்கள் உண்டு. அது அப்படியே மனிதனுடைய ஜீவியத்தில் உள்ளது. நாம் நடுநிலையில் நிற்க முடியாத ஒரு சமயம் இருக்கிறது. தேவன் அனுமதிப்பாரானால், நாம் இன்றிரவு இந்த சபையினுள் வந்த போது இருந்த அதே நிலையில் நம்மால் இந்த சபையை விட்டுக் கடந்து செல்ல நம்மால் கூடுமென்று நான் நம்புவதில்லை. பரிசுத்த ஆவியானவர் வந்து நம் மத்தியில் தம்முடைய கிரியையை செய்வாரானால், நாம் “ஆம்” அல்லது “இல்லை” என்று கூறும்படி நிர்பந்திக்கப்படுகிறோம். நாம் தொடர்ந்து அதே நிலையிலேயே இருக்க முடியாது. 11. மகத்தான கோத்திரப் பிதாவும் தேவனுடைய தாசனுமாகிய ஆபிரகாமுக்கு ஒரு தீர்மானம் செய்ய வேண்டிய நேரம் வந்திருந்தது. இந்தத் தீர்மானமானது அவனுடைய குமாரனும், அவன் 25 வருடங்களாகக் காத்திருந்து, மரித்தோரிலிருந்து ஒருவனைப் பெற்றுக் கொள்வது போன்று, அவனைப் பெற்றுக் கொண்டவனுமாகிய ஈசாக்கின் பேரில் அவன் அப்படியே தீர்மானம் செய்ய வேண்டியிருந்தது, அவன் ஒரு அழைக்கப்பட்ட, தேவனுடைய பிரித்தெடுக்கப்பட்ட செய்தியாளன் என்பதை அறிந்திருந்தான்... அவன் தீர்மானம் செய்ய வேண்டிய ஒரு நேரம் வந்தது: தேவனுடைய திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்றும்படியாக அவனுடைய வாழ்க்கைத் துணை யார் என்பது தான் அது. நீங்கள் பாருங்கள், நம்முடைய எல்லா தீர்மானங்களையும் தேவனே செய்து விடுவதில்லை. அநேக நேரங்களில், தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளிடமும் என்ன செய்ய வேண்டுமென்று கூறுவதில்லை, ஏனென்றால் அவர்களே அந்தத் தீர்மானத்தைச் செய்ய வேண்டியிருந்தது. நாம் செய்ய வேண்டிய தீர்மானம் எதுமில்லை என்றால், அப்படியே ஒவ்வொரு அசைவிலும் தேவன் பேரில் காத்திருங்கள், அப்போது அங்கே நம்முடைய பாகம் ஜெயிப்பதில்லை. அவர்கள் சில நேரங்களில், தவறான தீர்மானத்தைச் செய்தனர். தேவனுடைய அபிஷேகம் பண்ணப்பட்ட தீர்க்கதரிசிகள் தவறான தீர்மானங்களைச் செய்கின்றனர், அவர்கள் அநேக நேரங்களில் வஞ்சிக்கப்பட்டனர். 12. சரீரபிரகாரமாக குருடாகவும், அந்த சமயத்தில் ஆவிக்குரிய பிரகாரமாகவும் குருடாக அங்கே உட்கார்ந்து கொண்டிருந்த இந்த கர்த்தருடைய வல்லமைமிக்க தீர்க்கதரிசியாகிய ஈசாக்கினிடத்தில் ஏசாவும் யாக்கோபும் வந்ததை நீங்கள் எப்பொழுதாவது எண்ணிப் பார்த்ததுண்டா-? யாக்கோபு ஒரு துண்டு ஆட்டுத்தோலை தன்னுடைய கழுத்தைச் சுற்றிலும் போர்த்துக் கொண்டு, ஏசாவுடைய மேலாடையையும் உடுத்தியிருந்தான், எனவே அவன் வயல்வெளியின் வாசனையைப் போன்ற வாசனையைக் கொண்டிருந்தான். அவனுடைய தகப்பன் (ஈசாக்கு) தன்னுடைய தீர்க்கதரிசன கரங்களை தன்னுடைய குமாரன் மேல் வைத்தான், அப்போது தன்னுடைய குமாரன் மூலமாக அவன் ஆவிக்குரிய பிரகாரமாக வஞ்சிக்கப்பட்டான், இருப்பினும் அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். தேவனுடைய வல்லமைமிக்க மனிதனாகிய எலியா எப்படி அதைச் செய்தான்... சூனேமிய ஸ்திரீ அவசரமாக அழுது கொண்டு வந்த போது, அவள் தொல்லைக்கு உட்பட்டிருந்தாள் என்பதை எலியா அறிந்து, அவன், “தேவன் அதை என்னிடமிருந்து மறைத்து வைத்தார்,” என்றான். எனவே ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தீர்மானத்தைச் செய்யும்படியான நேரமானது அவனுக்குக் குறிக்கப்பட்டிருக்கிறது, அவன் ஒரு பிரசங்கியாய் இருந்தாலும், அல்லது ஒரு தீர்க்கதரிசியாய் இருந்தாலும், அல்லது ஒரு சபை அங்கத்தினனாக இருந்தாலும், அல்லது என்னவாய் இருந்தாலும், அவன் ஒரு தீர்மானம் செய்ய வேண்டியுள்ளது. 13. அந்த நேரம் வந்தது, ஆபிரகாம் தன்னுடைய குமாரன் ஒரு அவிசுவாசியை விவாகம் செய்ய விரும்பவில்லை என்று அவன் தீர்மானித்துக் கொண்டான். இன்று ஆபிரகாமுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாகிய கிறிஸ்தவர்களுக் கும் அது ஒரு நல்ல தீர்மானமாகும், அவர்களுடைய பிள்ளைகளைக் குறித்தும் அதே தீர்மானத்தைச் செய்வது. இப்பொழுது, அந்த அவிசுவாசியான பெண்கள் எவ்வளவு கவர்ச்சி வாய்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு அருமையான பெண்களாக இருந்தாலும் அது எந்த வித்தியாசத்தையும் உண்டாக்குவதில்லை, ஆனால் ஆபிரகாம் அம்மாதிரியான காரியத்தோடு தன்னுடைய குமாரன் இணைக்கப்படுவதை விரும்பவில்லை. எனவே, அவன் யாரை விவாகம் செய்ய வேண்டும் என்பதைக் குறித்து தீர்மானம் செய்ய வேண்டியிருந்த ஒரு நேரத்தை உடையவனாய் இருக்க வேண்டியிருந்தது. பிறகு ஈசாக்கிற்காக இந்த மணவாட்டியை தேர்ந்தெடுக்கும்படி அவன் யாரை அனுப்ப வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை அவன் செய்ய வேண்டியதாயிருந்த சமயம் வந்தது. அந்த நேரம் வந்த போது, அவன் தன்னுடைய ஊழியக்காரர்கள் எல்லாரையும் நோக்கிப் பார்த்தான். 14. நாம் இங்கே ஆபிரகாமைக் குறித்த ஒரு அழகான பாடத்தில், பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரனுக்கு ஒரு மணவாட்டியைச் சென்று கண்டு பிடிக்கும்படி ஒரு ஊழியக்காரனைத் தேடுவதைக் குறித்துள்ள பிதாவாகிய தேவனின் முன்னடையாளமாக நாம் ஆபிரகாமைக் கற்றுக் கொள்கிறோம். அதைத் தான் பிதாவானவர் இன்று செய்து கொண்டு இருக்கிறார். அவர் மணவாட்டிக்கு அனுப்பும் இச்செய்தியை எடுத்துச் செல்லும்படி, அவர் நம்பிக்கை வைத்திருக்கிற யாரோ ஒருவரை கண்டுபிடிக்கும்படி அவர் தம்முடைய குழுவை நோக்கிப் பார்த்துக் கொண்டு இருக்கிறார். எலியேசர் தான் அந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன் என்று அவன் தெளிவாக முடிவு செய்தான், ஏனென்றால் எலியேசர் ஒரு நம்பகமான ஊழியக்காரன் என்பதைக் கண்டு கொண்டு இருந்தான். அவன் விசுவாசம் உள்ளவனாகவும், உண்மை உள்ளவனாகவும், நேர்மை உடையவனாகவும், நீதிமானாகவும், கபடம் இல்லாதவனாகவும் இருந்தான். தேவன் தம்மிடத்திலிருந்து சபைக்கு ஒரு செய்தியை கொண்டு செல்ல தேர்ந்து எடுக்கக் கூடிய ஒரு ஊழியக்காரனுடைய மாதிரி இது தான்: நீதிமானாய் இருக்கிறான் என்று நிரூபிக்கப்பட்ட ஒருவனைப் போலிருத்தல். ஒரு குமாரனைத் தேர்ந்தெடுத்தல், அல்லது அவனை ஸ்தானத்தில் பொருத்துதல் என்பதன் பேரில் இங்கே சென்ற முறை கொடுக்கப்பட்ட என்னுடைய செய்தி உங்களுக்கு ஞாபகம் உள்ளதா-? அவன் எப்படியாக முதலில் நிரூபிக்கப்பட்டு, அதன் பிறகு குடும்பத்திற்குள் புத்திர சுவிகாரம் பெறுகிறான் அல்லது அந்த ஸ்தானத்தில் பொருத்தப்படுகிறான் என்பதைப் பற்றி. 15. ஆபிரகாமுக்கு தேவையாய் இருந்தவைகளை எலியேசர் நிறைவு செய்கிறவனாய் இருந்தான். எலியேசர் முன் மாதிரியான ஊழியக்காரனாக சித்தரிக்கப்படுகிறான். அவன் அனுப்பப்படுவது வரை அவன் எவ்வாறு போகாமல் இருந்தான் என்பதைக் குறித்து ஆதியாகமம் 24-ம் அதிகாரத்தில் நீங்கள் அந்தக் கதையை வாசித்திருக்கிறீர்கள். அநேகர் வெறுமனே அதைக் கொண்டு எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் என்பதற்காக செல்கின்றனர். இந்த மற்றவர்களோ தங்களுக்காக ஒரு பெரிய பெயர் பிரஸ்தாபத்தை உண்டாக்கிக் கொள்வதற்காக செல்கின்றனர். மற்றவர்கள் பிரபலமாக இருப்பதற்காக போகின்றனர். மற்றவர்கள் தங்களை மனிதனால் உண்டாக்கப்பட்ட ஏதோவொரு ஆட்சி முறைமை (regime) அனுப்புவதன் காரணத்தினால் போகின்றனர். ஆனால் சிலர் தேவன் தங்களை அனுப்புவது மட்டுமாகக் காத்திருப்பார்கள். முன் மாதிரியான ஊழியக்காரன் அதைச் செய்வான். மேலும் கவனியுங்கள். அவன் போன போது, அவன் எங்கே அனுப்பப்பட்டானோ அங்கு மாத்திரம் சென்றான், அதிக பணமுண்டு என்ற காரணத்தினால் சிலர் இங்கே போகலாம்.., வேண்டும் என்றோ, அல்லது பெரிய கூட்டம் உண்டு என்ற காரணத்தினால் இங்கே போகலாம் என்பதோ அல்ல. அவன் எங்கே அனுப்பப் பட்டானோ மிகச்சரியாக அங்கே அவன் சென்றான். 16. தேவன் அனுப்புகிற எந்த இடமாய் இருந்தாலும், பரிசுத்த ஆவியானவர் அசையும் போது, தானும் அசையும் மனிதர்களையே தேவன் இன்று தேடிக் கொண்டு இருக்கிறார். அது தான் முன் மாதிரியான ஒரு ஊழியக்காரன். அது மட்டுமல்ல, அவன் தன்னுடைய செய்திகளை பிரசங்கிக்க வேண்டிய தன்னுடைய இடத்திற்கு அவன் போன போது, அவன் தன்னை ஒரு போதும் தற்புகழ்ச்சி செய்யவேயில்லை. அவன் எவ்வளவு மகத்தானவன் என்பதைப் பற்றியோ, அல்லது தன்னுடைய கூட்டங்கள் எவ்வளவு மகத்தானதாய் இருந்தது என்பதைப் பற்றியோ, அல்லது தன்னைப் பற்றியுள்ள ஏதாவது எவ்வளவு மகத்தானதாயுள்ளது என்பதைப் பற்றியோ அவன் ஒரு போதும் பேசவில்லை. அவன் தன்னைப் பற்றி புகழ்ந்து பேசும் ஒருவனாகவோ, அல்லது பெருமையுள்ள ஒருவனாகவோ இருக்கவில்லை. ஆனால் அவன் தன்னுடைய எஜமானைக் குறித்தும், தன்னுடைய எஜமாடைய ஐசுவரியத்தைக் குறித்தும், தன்னுடைய எஜமானுக்கு சொந்தமான ஒவ்வொன்றிற்கும் சுதந்தரவாளியாகப் போகிற ஒரு குமாரன் தன்னுடைய எஜமானுக்கு உண்டு என்பதைக் குறித்து மாத்திரம் பேசினான். தேவனுடைய உண்மையான ஊழியக்காரன் ஒருவனைக் குறித்த என்னவொரு அழகான காட்சி: தன்னுடைய முழு கவனமும் எஜமானின் மேல் தான் இருக்கிறது, எஜமானைக் குறித்தும், குமாரனைக் குறித்துமே அல்லாமல் தன்னைப் பற்றியே ஜனங்களிடம் கூறிக் கொண்டிருக்க மாட்டான். அவர் எல்லாவற்றிற்கும் சுதந்தரவாளியாகப் போகிறார். அவன் தன்னைக் குறித்தோ அல்லது தன்னுடைய.., அல்லது தன்னுடைய மகத்தான (தன்னை அனுப்பின) அதிகார குழுவினரைக் குறித்தோ, அல்லது தன்னுடைய ஸ்தாபனத்தைக் குறித்தோ அல்லது அவன் கொண்டு இருக்கும் ஏதோவொரு தலைமை அலுவலகத்தைக் (affiliation) குறித்தோ புகழ்ந்து பேசும்படி அவன் நேரத்தைக் கொண்டிருக்காமல், அந்த எஜமானைக் குறித்தும், அந்த குமாரனைக் குறித்தும் பேச அதிக நேரத்தை அவன் கொண்டு இருக்கிறான். 17. இப்பொழுது, எலியேசர் இன்று ஊழியக்காரர்கள் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனையைப் போன்ற ஒன்றை சந்தித்தான். அவன் தேர்ந்தெடுக்கத்தக்கதான அநேக ஏராளமான பெண்கள் அங்கு இருந்தார்கள். தேர்ந்தெடுக்கும் காரியமானது அவசரமாகச் செய்யப்பட வேண்டியிருந்தது. நாம் சுற்றிலும் உட்கார்ந்து கொண்டு அதைக் குறித்து சிந்தித்துக் கொண்டோ அல்லது வியந்து கொண்டு இருக்கவோ நமக்கு நேரமில்லை. நாம் துரிதமாக தீர்மானம் செய்ய வேண்டியுள்ளது. காலம் சமீபமாயுள்ளது. இன்றிரவு இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் ஜனங்களுக்கு, உங்களுடைய தீர்மானத்தைச் செய்வதற்கு இதுவே உங்களுடைய கடைசி தருணமாக இருக்கலாம். இது அவசரமாக இருக்கிறது. நாளைய தினம் பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் செயல்பட வேண்டாம். நாளை என்பது ஒருக்கால் உங்களுக்கு வராமலேயே போகலாம். ஒரு சமயம் இருந்த அந்த பெண்ணைப் போல. அவள் தான் காதலிப்பதாக எண்ணி இருந்த இரண்டு மனிதர்கள் அவளுக்கு இருந்தார்கள். யாரை விவாகம் பண்ணுவது என்பது அவளுக்குத் தெரியவில்லை. அவள் ஒருவனை விவாகம் பண்ண வேண்டும் என்று சிறிது காலம் எண்ணியிருந்தாள், பிறகு அவள் மற்றவனை விவாகம் பண்ண வேண்டுமென்று எண்ணினாள். அவள் தன்னுடைய தீர்மானத்தை அதிக காலம் தள்ளிப் போட்டதனால், அவர்கள் இருவரையுமே இழந்து விட்டாள். நாம் விழிப்பாயிருப்பது நல்லது. தீர்மானமானது துரிதமாகச் செய்யப்பட்டாக வேண்டும். 18. பிறகு மீண்டுமாக, அந்த ஊழியக்காரன் அப்படியே போய் விடுவதுடன் இங்கே திருப்தி அடைந்து விடவில்லை. அவனுக்கு ஏதோவொரு விதமான ஒரு உறுதி தேவைப்பட்டது. அவன், “அந்தப் பெண் வராமல் போனால் என்ன செய்ய வேண்டும்-? நான் இந்தக் காரியங்களை அவளிடம் கூறும் போது, அவள் வராவிட்டால், என்ன செய்ய வேண்டும்-?” என்று தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தான். பிறகு அவன் ஒரு தீர்மானம் செய்ய வேண்டியிருந்தது. அப்போது அவனது எஜமானுடைய உதடுகளிலிருந்து, “தேவனுடைய தூதனானவர் உனக்கு முன்னே போவார்...” என்று கூறக் கேட்டபோது. ஓ, அது எனக்கு மிகவும் பிடிக்கும். அது அப்படியே என்னுடைய காரியத்தோடு சரியாகப் பொருந்துகிறது. “கர்த்தருடைய தூதனானவர் உனக்கு முன்னே போவார், அவர் அவளிடம் பேசி சம்மதிக்க வைப்பார் (persuade).” தேவன் தம்முடைய செய்தியாளனோடு கூட தமது தூதனையும் அனுப்பினார். தேவன் தான் அதைச் செய்கிறார், அது உங்களுக்குத் தெரியும். அவர் அதை அவ்விதமாகத் தான் செய்கிறார். அவர் தானியேலை அனுப்பினார்; அவர் மற்றவர்களையும் அனுப்பினார், அவர் அவர்களோடு கூட ஒரு தூதனையும் அனுப்பினார். எனவே அவர் ஒவ்வொரு முறையும் அதே காரியத்தையே செய்கிறார்; அவர் அந்தவிதமாகத் தான் பேசுகிறார். 19. அவர், “தேவ தூதர்கள் - பரலோகத்தின் தூதனானவர் உங்களுக்கு முன்னே போவார்,” என்றார். ஓ, ஆம், நீங்கள் கடினமான தீர்மானங்களை செய்யும்படியான நேரங்கள் இருக்கின்றன. நீங்கள்... நேரங்களுண்டு. ஒருக்கால் உங்களுடைய நடுத்தர வயதில், நீங்கள் உங்களுடைய கடைசி சம்பாத்தியத்தை வைத்து இருக்கலாம். நீங்கள் இங்கே கொஞ்சமும், அங்கே கொஞ்சமுமாக சேமித்து வைக்கிறீர்கள். ஆனால் இப்பொழுது, நீங்கள் ஒருக்கால் அந்தப் பணத்தை எங்கோ ஓரிடத்தில் முதலீடு செய்ய வேண்டிய நிலைக்கு வர வேண்டியதாய் இருக்கலாம். நீங்கள் அந்தப் பணத்தை எங்கே முதலீடு செய்ய வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை நீங்கள் செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள். நீங்கள் அந்தப் பணத்தை முதலீடு செய்வதற்கு முன்பு, அதைப் பாதுகாப்பாக முதலீடு செய்யும் ஒரு இடத்தை நீங்கள் முதலில் கண்டுபிடிப்பீர்கள். ஓ, நாம் ஒரே இரவிற்குள் பணக்காரர்களாக ஆகும் காரியங்களை இன்று கொண்டு இருக்கிறோம்: அதை இங்கே முதலீடு செய்யுங்கள், நீங்கள் நாளைக்கு ஒரு கோடீஸ்வரர் (ஆகி விடலாம்) என்பதான காரியங்கள். ஆனால் நீங்கள் அதைப் போன்ற அப்படிப்பட்டதான ஒரு இடத்தில் உங்கள் பணத்தை முதலீடு செய்ய மாட்டீர்கள், ஏனென்றால் அது உங்களுடைய ஜீவியத்தின் சம்பாத்தியமாகும். ஆனால் நீங்கள் என்ன செய்வீர்கள்-? நீங்கள் அமைதலோடும் உத்தமத்தோடும் கூட, பாதுகாப்பானதென்று பரீட்சிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்ட, ஒரு பழைய நம்பகமான நிறுவனத்தையே நீங்கள் தேடுவீர்கள். அங்கு தான் நீங்கள் உங்களுடைய பணத்தை முதலீடு செய்வீர்கள், ஏனென்றால் மக்களுடைய பணத்தை ஏமாற்றி விட்டு இரவோடு இரவாக ஓடிப்போகிற இவைகள் எதையும் நீங்கள் விரும்புவது இல்லை. 20. நீங்கள் உங்களுடைய ஜீவியத்தின் சம்பாத்தியங்களைக் குறித்து உங்கள் தீர்மானத்தில் உத்தமமாகவும் அக்கறையுடனும் இருப்பீர்களானால், நீங்கள் உங்களுடைய மார்க்கத்தைக் குறித்தும் உங்களுடைய இரட்சிப்பைக் குறித்தும் எவ்வளவு அதிக உத்தமமாக இருக்க வேண்டும்-? நாம் இந்தச் சிறு நம்ப முடியாத கருத்துக்கள் சிலவற்றிலோ, அல்லது ஒரு சபை புத்தகத்தில் உங்களுடைய பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள் என்பதிலோ, போதகருடன் கரங்களைக் குலுக்குங்கள் என்பதிலோ போகக்கூடாது. அது கிரியை செய்யாது. பரிசுத்த ஆவியானவர் மனுஷர்கள் மத்தியில் வாசம் பண்ண இறங்கி வந்த பெந்தெகோஸ்தே நாளின் போது நிறுவப்பட்ட பழைய நம்பகமான ஒரு நிறுவனத்தை நான் இன்றிரவு உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன். உங்களுடைய ஆத்துமாவையும் நித்தியத்தில் உங்களுடைய வருங்காலத்தையும் முதலீடு செய்வதற்கு, ஒரு பழைமை நாகரீகமான பெந்தெகோஸ்தே அனுபவத்தில் உள்ளதாக நான் அறிந்திருக்கிற அதிக நம்பகமான நிறுவனம் அதுவே ஆகும். அது காலத்தால் பரீட்சிக்கப்பட்டு சத்தியம் என்று நிரூபிக்கப்பட்டு உள்ளது. 2000 வருடங்களாக அது சிறிதேனும் மாறவேயில்லை. பெந்தெகோஸ்தேயில் செலுத்தப்பட்ட அதே வட்டித் தொகையே இன்னும் இந்த நிறுவனத்தினால் செலுத்தப்பட்டு வருகிறது: பரிசுத்த ஆவியின் வரமும், சுகமளிக்கிற வல்லமையும், தரிசனங்களைக் காண்பதும், தூதர்கள் உங்களுக்குப் பிரத்தியட்சமாவதும். அப்போஸ்தலர்கள் கொண்டிருந்து, அவர்களைப் பாதுகாப்பாக தாங்கிச் சென்ற அந்த ஊழியமானது, அவர்களை எவ்வளவு பாதுகாப்பாக கரை சேர்த்ததோ அது போன்றே உங்களுடைய ஆத்துமாவையும் போய் சேரும் இடத்திற்கு அப்படியே அவ்வளவு பாதுகாப்பாக உங்களையும் எடுத்துச் செல்லும். 21. என்னுடைய ஜீவிய சம்பாத்தியங்கள், அப்படிப்பட்டவைகள் எனக்கிருந்தாலும், பணத்தை ஏமாற்றி விட்டு, இரவோடு இரவாக ஓடிப் போகக் கூடியதான காரியங்களின் பேரில் என்னால் நம்பிக்கை வைக்க முடியாது. இங்கே இக்கடைசி நாட்களில் வேகமாக வளர்ச்சியடைகிற இந்தச் சிறு நிறுவனங்களில் எதையுமோ, ஒரு காகிதத்தில் என்னுடைய பெயரோ அல்லது ஏதோவொரு வகையான சிறு உணர்ச்சி வசப்படுதலையோ நான் விரும்புவதில்லை. நான் பழமையான நம்பகத் தன்மை வாய்ந்த அனுபவத்தையே விரும்புகிறேன். திடமான அறிக்கை செய்யும்படி உங்கள் தீர்மானத்தைச் செய்து, உங்களை நித்தியத்திற்குள் கொண்டு செல்லும் அந்த அனுபவத்தை நீங்கள் பெறுவது மட்டுமாக காத்திருங்கள். அது பவுலுக்கும் சீலாவுக்கும் நன்றாகவே இருந்தது; அந்த இரவு சிறைச்சாலையில் இருந்த பேதுருவுக்கும் அது நல்ல காரியத்தையே செய்தது. அடுத்த நாள், அவன் தலை வெட்டப்பட வேண்டியவனாய் இருந்தான், அப்போது கர்த்தருடைய தூதனானவர் ஒரு அக்கினிஸ்தம்பமாக வந்து, அவனைத் தொட்டு, அவனை விடுதலை பண்ணினார். அந்த அதே தூதனானவர் இன்னும் - இன்றிரவும் பெற்றுக் கொள்ளும் நிலையில் உள்ளது. அது இன்னுமாக பரிசுத்த ஆவியின் வடிவில் ஜீவனுள்ள தேவனுடைய சபையில் பின்தொடர்ந்து வருகிறது. 22. அந்த அலைகளினூடாக திடீரென்று பளிச்சிட்டு எப்பொழுதும் மின்னல்கள் தாக்கிக் கொண்டிருக்க, பிசாசுகள் ஆரவாரம் செய்து கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்த அந்த இரவு நேரத்தில், அந்த புயல் வீசும் கடலில் பவுலோடு இருந்த அதே தேவனுடைய தூதனானவர். அவன் உறுதியோடு அங்கிருந்து ஓடி வந்து, அவன், “நான் சேவிக்கிற தேவனுடைய தூதனானவர் என்னிடத்தில் வந்து நின்றார். இந்தக் கப்பலில் உள்ள ஒரு ஆத்துமாவும் சேதமடையப் போவதில்லை” என்றான். நான் அந்த நிறுவனத்தைத் தான் உங்களுக்குப் பரிந்துரை செய்கிறேன். அது நம்பகமானது. அது கிருபையானது. கர்த்தருடைய நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடி பாதுகாப்பாயிருப்பான். இன்றிரவு நீங்கள் தாமே அந்தக் கணக்கில் முதலீடு செய்யுங்கள். தேவன் தமக்கு சொந்தமானவர்களைக் குறித்து பொறுப்பெடுத்துக் கொள்வார். அந்த முதலீடு பாதுகாப்பானதாய் இருக்கிறது. அது தூதர்களால் பின் தொடரப்படுகிறது, அது அடையாளங்களையும் அற்புதங்களையும் தரிசனங்களையும் கொண்டு இருக்கிறது. அது கர்த்தராகிய இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் நேரடியான சாட்சியத்தைக் காண்பிக்கிறது. ஆம். 23. அந்தப் பழைய காலத்து மார்க்கம் எனக்குப் பிடிக்கும், அது எனக்கு நன்கு போதுமானதாக உள்ளது. அது என்னுடைய வயதான தகப்பனாரை அக்கரை சேர்த்தது. அது பவுலையும் சீலாவையும் கரை சேர்த்தது. அவர்கள் பவுலுடைய தலையை வெட்டப் போன போது, பவுல், “நல்ல போராட்டத்தைப் போராடினேன். ஓட்டத்தை முடித்தேன். விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன்; இது முதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அதை எனக்குத் தந்தருளுவார்” என்று கூறும்படிக்கு அது செய்தது. நான் அந்த விசுவாசத்தை அதிகமாகப் பரிந்துரை செய்கிறேன். நீங்கள் இன்றிரவு தீர்மானங்களின் கீழாக இருப்பீர்களானால், நீங்கள் மொதோடிஸ்டாகவோ, பாப்டிஸ்டாகவோ, பெந்தேகோஸ்தேயினராகவோ அல்லது பிரஸ்பிடேரியனாகவோ இருக்கும்படி இன்னும் முடிவு செய்ய வேண்டாம்; நான் அந்தப் பழங்காலத்து மார்க்கத்தை உங்களுக்கு அறிமுகம் செய்வேனாக, அது நல்லது. நீங்கள் உங்கள் ஆத்துமாவினுடைய உறுதிப்பாட்டில் இளைப்பாற முடியும், அவர் உங்களை அதனூடாகக் கொண்டு செல்வார். 24. அந்தத் தூதனானவர் எலியேசரின் முன்பாகப் போய்க் கொண்டிருந்தார் என்ற உறுதி அவனுக்கு இருந்த போதுதான், தான் போகலாம் என்று முடிவு செய்ய முடிந்தது, ஏனென்றால் அவனுக்கு உதவியாயிருக்கும் ஏதோவொன்று அவனுக்கு இருந்தது. சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணும் ஒவ்வொரு தேவ மனிதருக்கும் அந்த உறுதிப்பாடு நிச்சயமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவன் பிரசங்கிக்கிறவைகளை தெளிவுபடுத்த தேவனிடமிருந்து ஏதோவொரு உறுதிப் பாட்டை (நிச்சயத்தை) அவன் பெற்றிருந்தான். சகோதரர்களே, நீங்கள் அதைப் பெற்றிருக்கவில்லை என்றால், அது உங்களுக்காகவே உள்ளது. தேவனுடைய மனுஷர்கள் சபைக்கு செய்தியைக் கொண்டு செல்லும் போது, தேவன் இன்னுமாக அவனுக்கு முன்பாக செல்லும் ஒரு தூதனோடு அவனை அனுப்புகிறார். அது மட்டுமல்ல, எலியேசர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற போது, ஈசாக்குடைய தகப்பன் கிறிஸ்துவின் பிதாவுக்கு பிரதிநிதித்துமாய் இருந்தான். அவன் ஒட்டகங்களின் பரிவாரம் முழுவதுமாக மணவாட்டிக்காக நன்மையான ஈவுகளால் நிரப்பினான். ஓ, நான் சரியாக இப்பொழுதே பக்தி பரவசப்படுகிறேன். ஓ, நான் எவ்வளவாக இயேசுவை நேசிக்கிறேன். அவன் மணவாட்டிக்குக் கொடுக்கும் படியாக நன்மையான ஈவுகளை ஒட்டகங்கள் நிறைய நிரப்பினான், அவைகள் வேறொரு சந்ததியாருக்குரியது என்றோ அல்லது வேறொரு நாளுக்குரியது என்றோ அவன் அவளிடம் ஒருபோதும் கூறவில்லை, ஆனால் அவைகள் மணவாட்டிக்காகவே இருந்தது. 25. அனுப்பப்பட்டிருக்கிற ஒவ்வொரு உண்மையான ஊழியக்காரனும், தான் மணவாட்டிக்குக் கொடுக்கக்கூடிய அளவில் ஒரு புத்தகம் முழுவதும் நிறைந்துள்ள தெய்வீக வாக்குத்தத்தங்களைப் பெற்றிருக்கிறான். நான் அதைக் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவன் அவளுக்காகக் கொடுக்கும்படி அங்கே வெகுமதிகளைப் பெற்றிருக்கிறான். அவன் அவைகளில் எதையும் கொடுக்காமல் வைத்துக் கொள்ள மாட்டான். அவன் அவைகள் ஒவ்வொன்றையும் போதுமான அளவு பெற்றிருப்பான். தேவன் நம்பிக்கை வைக்கக்கூடிய ஊழியக்காரனாகிய ஒரு உண்மை ஊழியக்காரனும், ஒரு மாதிரி ஊழியக்காரனும் அவன் தான். அவன் அதை அவளிடமிருந்து பின்னால் மறைத்து வைக்க முயற்சிக்க மாட்டான், ஏனென்றால் அவள் வரப்போகிற மகாராணி என்பதை அவன் அறிந்திருக்கிறான். ஓ, அவருக்கு முன்பாக உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு எந்த நன்மையும் வழங்காதிரார். “நீங்கள் ஜெபம் பண்ணும் போது, நீங்கள் எவைகளை விரும்புகிறீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வீர்கள் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும். நீங்கள் என்னிலும் என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள், அப்பொழுது அது உங்களுக்குக் கொடுக்கப்படும்.” புத்தகம் முழுவதும் அதைப் பற்றியது தான். புத்தகத்திலுள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் உங்களுடையதாக இருக்கிறது, மணவாட்டியாகிய உங்களுடையது. 26. அவன் சாயங்கால வேளையில் கிணற்றுக்கு வந்தான். இப்பொழுது, எலியேசர் செய்ய வேண்டிய வேறொரு தீர்மானத்திற்கான ஒரு நேரம் வருகிறது. அவன் அந்தப் பெண்ணைப் பற்றிய தன்னுடைய சொந்த அபிப்ராயத்தில் நம்பிக்கை வைக்க வேண்டுமா, அல்லது அவன் பெண்ணைப் பற்றிய தேவனுடைய அபிப்ராயத்தில் நம்பிக்கை வைக்க வேண்டுமா என்று ஒரு தீர்மானத்தை அவன் செய்ய வேண்டியவனாய் இருந்தான். ஓ, உண்மையான ஊழியக்காரர்கள் எப்படியாக மிகவும் மனக்குழப்பத்திற்கு உள்ளாகின்றார்கள். அவர்கள் சுற்றிலுமிருக்கிற ஏதோவொரு பெரிய அருமையான சபையையும், ஒரு வர்ணம் தீட்டப்பட்ட யேசபேலையும் நோக்கிப் பார்த்து, “அங்கே தான் கர்த்தர் என்னை அழைக்கிறார்,” என்று கூறுகிறார்கள், ஏனென்றால் டாக்டர் இன்னார் இன்னார் அங்கே பிரசங்கிக்கிறார் என்று அவர்களுடைய அறிவாளிகள் கூறின காரணத்தினால் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள். தேவனே உங்களிடம் பேசட்டும். அவள் யாராக இருப்பாள் என்பதைக் குறித்து - நீங்கள் ஐக்கியம் வைக்கப் போகிறவர்களைக் குறித்து தேவனே தீர்மானம் செய்யட்டும். அது என்ன தரத்தில் உள்ளதாய் இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை, எப்படியானாலும் வாருங்கள். தேவனே பேசட்டும். 27. அவன் பட்டணத்திற்கு அருகிலுள்ள அந்தக் கிணற்றுக்கு வரும் போது, அது சாயங்கால வேளையாயிருந்தது. ரெபேக்காள் ஒரு தீர்மானம் செய்ய வேண்டி இருந்த சமயமாக ஏறக்குறைய அந்த நேரம் இருந்தது. கர்த்தருடைய தூதனானவர் ஏறக்குறைய அரைமணி நேரமாக அவனைத் தட்டிக் கொண்டே இருந்தார் என்று நான் நம்புகிறேன். அவர் தமது தூதர்களை உங்களுக்கு முன்னே அனுப்பி, பாதையைச் செவ்வை பண்ணுவார். தேவனுடைய தூதனானவர் ரெபேக்காளின் இருதயத்தில், “தண்ணீர் எடுக்கச் செல்,” என்று கட்டாயம் பேசியிருக்க வேண்டும். ரெபேக்காள் ஜீவத் தண்ணீரண்டையில் சாங்கால நேரத்தில் வந்தாள். அந்தக் காட்சி உங்களுக்குப் புரிகிறதா-? சபையானது கடைசி நாட்களில், சாயங்கால நேரத்தில் இருக்கிறது. சாயங்கால வெளிச்சம் இங்கே உள்ளது. ஈசாக்கின் மணவாட்டியாகிய ரெபேக்காளுக்கு கர்த்தருடைய தூதனானவர் ஒரு இயற்கைக்கு மேம்பட்ட விதத்தில் தம்மைத்தாமே வெளிப்படுத்துகிற நேரமாக இது இருக்கிறது. ஏதோவொரு வகையில் அல்லது வேறொரு வகையில், அவள் ஜீவத் தண்ணீர்களண்டைக்குப் போகும்படி செல்கிறாள். ஆமென். ஓ, என்னுடைய இருதயமானது சந்தோஷத்தினால் நிரம்பி வழிகிறது. நான் அதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும் போது, பிரசங்கமே பண்ண முடியாத அளவுக்கு (சந்தோஷமாய்) உள்ளது. அந்த சாயங்கால நேரம் வந்து உள்ளது. கர்த்தருடைய தூதனானவர் இந்தச் செய்தியில் இருக்கிறார், அவர் முன்னே சென்று, ரெபேக்காள் ஜீவத் தண்ணீர்களண்டையில் வரும்படி அவளிடம் நயந்து பேசுகிறார். இயற்கைக்கு மேம்பட்ட விதத்தில் அசைவாடுதல்... 28. எலியேசர், “ஓ தேவனாகிய கர்த்தாவே, இயற்கைக்கு மேம்பட்ட ஏதோவொன்று சம்பவிக்கட்டும்,” என்று ஜெபிக்கத் தொடங்கினான். ஓ, என்னே. “நீர் உம்முடைய தூதனை எனக்கு முன்பாக அனுப்பினீர். இப்பொழுது அவர் தாமே ஏதோ ஓன்றைச் செய்யட்டும். அவர் எனக்கு முன்பாக போய்க் கொண்டிருக்கிறார் என்பதை நான் அறிவேன். குடத்திலிருந்து எனக்குக் குடிக்கக் கொடுத்து, அதோடு கூட நான் கேட்காமலே என்னுடைய ஒட்டகங்களுக்கும் தண்ணீர் குடிக்கக் கொடுக்கும் அந்த வாலிப பெண் வரட்டும், அவளே அந்த ஒருவளாக இருப்பாளாக,” என்றான். அவன் இப்படிச் சொல்லி முடிக்கும் முன்பே, ரெபேக்காள் வந்தாள். தேவன் சரியாக அந்த இடத்தில் இருக்கிறார். உங்களுடைய இருதயமானது தேவனுக்காக பசி தாகம் கொள்ளும் முன்பே (அந்த நேரத்திலேயே), பரிசுத்த ஆவியினுடைய ஏதோவொரு விதமான எழுப்புதல் எங்கோ ஓரிடத்தில் வெடித்துக் கிளம்பும் (break out). ஏதோவொன்று சம்பவிக்கும். அண்டை வீட்டுக்காரர் சுகமடைந்து, அதைக் குறித்து உங்களிடம் கூறும்படி வருவார். கர்த்தருடைய தூதனானவர் அசைவாடுவதை நீங்கள் பார்க்கும்படியாக ஏதோ ஓன்று சம்பவிக்கும். 29. இப்படியிருக்க ரெபேக்காள் திடீரென்று அங்கு வரக் காரணம் என்ன-? அவள் ஏன் ஜீவத் தண்ணீர்களண்டையில் மிகவும் துரிதமாகச் சென்றாள்-? தூதனானவரால் ஏன் அவளிடம் பேச முடிந்தது-? ஏனென்றால் அவள் ஈசாக்குக்கு இரத்த சம்பந்தமான ஒரு உறவின் முறையாளாக இருந்தாள். இன்றிரவும் தூதனானவர் இரத்த சம்பந்தமான ஒரு உறவின் முறையாரிடம் தான் பேச முடியும். நாம் இரத்தத்தின் மூலமாகவே கிறிஸ்துவின் சரீரத்திற்குள் பிறந்து இருக்கிறோம். ரெபேக்காள் ஈசாக்குடைய தகப்பனின் (ஆபிரகாமின்) சகோதரனுடைய வழி வந்த உறவினளாக இருந்தாள் (own cousin by both fathers), அது அவர்களை இரத்த சம்பந்தமான உறவின் முறையாராக ஆக்கினது. இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி, கிறிஸ்துவின் இரத்தத்தின் வழியாக பரிசுத்தமாக்கப்பட்டு, பரிசுத்த ஆவியானவர் பேசுவதற்கு ஒரு திறந்த பாத்திரமாக இருக்கிறாள். அவள் ஜீவத் தண்ணீர்கள் அண்டையில் வருவாள் என்பதில் வியப்பு ஓன்றுமில்லை. “கேட்கிறவன் ஜீவத்தண்ணீர்கள் அண்டையில் இலவசமாய் வரக்கடவன்.” “மணவாட்டி, “வா” என்கிறாள்.” “தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்.” “நீங்கள் நீதியின் பேரில் பசிதாகம் உடையவர்களாயிருந்தால், பாக்கியவான் களாய் இருப்பீர்கள், அப்பொழுது நீங்கள் நிறைக்கப்படுவீர்கள்.” அது பிதாவின் உடைய ஒரு வாக்குத்தத்தமாக உள்ளது. 30. அவள் துரிதமாக தன்னுடைய தீர்மானத்தைச் செய்தாள். பிறகு கூட்டத்தில் மிகத் துரிதமாக இருக்கும் அவளைக் கவனியுங்கள். அவர்கள் நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டிருந்தால், அவர்கள் அதைத் துரிதமாக அறிந்து கொள்வார்கள். அவர்களை உணர்ச்சிவசப்படுத்த செய்தியில் ஏதோ ஓன்றுள்ளது. அது தான் ரெபேக்காளையும் உணர்ச்சி வசப்படுத்தினது. செய்தியானது அவளைக் கிளர்ச்சி ஊட்டினது, தூதனானவர் அவளை வழிநடத்திக் கொண்டிருந்தார். ஓ, உங்களால் அவளுடைய காட்சியைக் காண முடியவில்லையா-? கர்த்தருடைய தூதனானவர் அவளை வழி நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அவள் உணர்ச்சி வசப்பட்டாள். அவள் ஒட்டகத்திற்கு தண்ணீர் நிரப்பின உடனே, வெகுமதியானது அவளிடம் சென்றது. அவன் காதணிகளை வெளியே எடுக்கத் தொடங்கினான், விசுவாசம் கேள்வியினால் வருகிறது என்பதை அது அர்த்தப்படுத்துகிறது, (உங்களுக்குப் புரிகிறதா), கடகங்களையும் (bracelets) அணிவித்தான், உங்கள் கரங்களின் கிரியைகள். அவன், அவளை ஆயத்தப்படுத்தினான். அவள் தண்ணீரை நிரப்பி, ஜீவத்தண்ணீர்களைக் கொடுக்க ஆரம்பித்தவுடனே, சாட்சி கூறி, மற்றவர்களிடம் சொல்லி, செய்தியை வெளியே கொண்டு சென்றாள். உங்களுக்கு என்ன சம்பவித்திருக்கிறது என்பதை அவர்களிடம் கூறுங்கள். 31. அதன் பிறகு செய்யப்பட வேண்டியிருந்த வேறொரு பெரிய தீர்மானம் அங்கே இருந்தது. அப்போது அவளுக்குக் கொடுக்கப்பட்ட பிறகு, பெற்றோர்கள், “நல்லது, நான்... இவள் ஏறக்குறைய பத்து நாளாகிலும் (இங்கே) தங்கியிருக்கட்டும்” என்றார்கள். அவள் அதைச் செய்யும்படியாக முடிவு செய்திருக்கிறாளா இல்லையா என்பதை உண்மையாகவே உணரும்படி இவள் இந்த எழுப்புதலிலே தங்கி இருக்கட்டும் (hang around). ஒரு தீர்மானத்தைச் செய்ய நாளை வரைக்கும் கூட காத்திருக்கும் ஒரு நபரிடத்தில் நான் அதிக நம்பிக்கை வைப்பதில்லை. ஆனால் அந்தச் செய்தியானது ரெபேக்காளை உணர்ச்சி வசப்படுத்தி இருந்தது. செய்தியானது தேவனிடமிருந்து (வந்திருக்கிறது) என அவள் திருப்தி அடைந்து இருந்தாள். இந்நிலையில் பெற்றோர்கள், “ஓ, அவள் சிறிது காலம் தங்கியிருக்கட்டும். அப்போது அவளுக்கு அது புரியும். அது வெறுமனே கொஞ்சம் மனக்கிளர்ச்சி தான். அவள் அந்த எழுப்புதலில் இருந்தாள் என்பது உங்களுக்குத் தெரியுமே, மேலும்...” என்றனர். ஆனால், ஓ, அப்போது அந்த உண்மை ஊழியக்காரன், “எங்களைச் சோர்வடையச் செய்ய வேண்டாம் - அவ்வாறு செய்ய வேண்டாம். என்னைத் தடை செய்யாதீர்கள்,” என்றான். அநேக தேவனுடைய ஊழியக்காரர்கள் தாமதப்படுத்துகிற தீர்மானங்களால் தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். “என்னைத் தடை செய்யாதீர்கள், கர்த்தர் என்னை அனுப்பியிருக்கிறார் என்பதைப் பாருங்கள், அவர் எனக்கு நல்லவராய் இருந்து வருகிறார் என்பதைப் பாருங்கள். என்னைத் தடை செய்யாதிருங்கள்,” என்றான். அப்போது அவர்கள், “அவளே தன்னுடைய சொந்த தீர்மானத்தைச் செய்யட்டும்” என்றார்கள். நீங்களும் இன்றிரவு அங்கே தான் நின்று கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய சொந்த தீர்மானத்தைச் செய்யுங்கள். பிறகு அவர்கள் ரெபேக்காளை அழைத்து, “நீ இந்த மனிதனோடே போகிறாயா அல்லது நீ உண்மையாகவே அதைச் செய்ய விரும்புகிறாயா என்று பார்க்கும்படி நீ சிறிது காலம் (இங்கேயே) தங்கியிருக்க விரும்புகிறாயா-?” என்றனர். அவள், “நான் போகிறேன்,” என்றாள். அவள் ஆயத்தமாக இருந்தாள். அவளுடைய தீர்மானமானது துரிதமாகச் செய்யப்பட்டதாகும். ஏதோவொன்று அவளை வழி நடத்திக் கொண்டிருந்தது என்பதை அவள் அறிந்திருந்தாள். அவளுக்கு ஏதோ சம்பவித்திருந்ததை அவள் அறிந்து கொண்டாள். அது தேவனாக இருந்தது என்பதை அவள் அறிந்து, அவள் திருப்தி கொண்டிருந்தாள். அவள் துரிதமாகப் போக விரும்பினாள். ஆகையால் அவள் தன்னுடைய வஸ்திரத்தைத் தரித்துக் கொண்டாள். அந்தக் குமாரனை சந்திப்பதற்காக அந்தப் பிதாவினால் அவளுக்கு அனுப்பப்பட்டிருந்த வெகுமதிகள் எல்லாவற்றையும் அவள் பெற்றுக் கொண்டாள். ஓ, தேவனே, சபை மாத்திரம் அந்தத் தீர்மானத்தை மிகத் துரிதமாகச் செய்யக் கூடுமானால். அவளுடைய வெகுமதிகள் எல்லாவற்றையும் அணிந்து கொண்டு, அவள் ஒட்டகத்தின் மீதேறி அவைகளை எடுத்துச் சென்றாள். 32. ஈசாக்கு தியானம் பண்ணும்படியாக கூடாரத்திலிருந்து வெளியே வயல் வெளிக்கு கால் போன போக்கில் நடந்து போய்க் கொண்டிருந்தது சாயங்கால வேளையாய் இருந்தது. அப்போது ஒட்டகங்கள் வருவதை அவன் கண்ட போது... ரெபேக்காள் அவனை நோக்கிப் பார்த்தாள், அப்போது முதல் பார்வையிலேயே அது காதலாக இருந்தது. அவள் அங்கே போவதற்கு முன்பே அவள் அதை விசுவாசிக்க வேண்டியதாய் இருந்தது. விசுவாசமானது கேட்பதினால் வருகிறது. அந்த மனிதன் எவ்விதமாகத் தோற்றமளிப்பான் என்பதை அவள் அறியாதிருந்தாள், அவளுக்கு அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை. தேவனே அந்தத் தீர்மானங்களைச் செய்ததாக அது இருந்தது. அவர் பெரிய ஆளாகவோ, அல்லது சிறிய ஆளாகவோ, அவர் எந்த நிறத்தில் இருக்கிறார் என்றோ எனக்குக் கவலையில்லை. அது எந்த வித்தியாசத்தையும் எனக்கு ஏற்படுத்துவதில்லை. அவர் என்னுடைய கர்த்தராக இருக்கிறார். நான் அவரைக் காணும் போது, அவரை நேசிப்பேன், ஏனென்றால் அவரே எனக்கும் உங்களுக்கும் தேவனுடைய வெகுமதியாக இருக்கிறார். 33. அவள் ஒட்டகங்களை விட்டுக் கீழே இறங்கினதும், தன்னுடைய முகத்தில் முக்காடிட்டுக் கொண்டாள். அவளுடைய அழகான கண்களானது ஈசாக்குடைய கண்களைக் கவர்ந்து கொண்டது, அவன் சென்று அவளுடைய கரங்களைப் பற்றிக் கொண்டு, தாயுடைய இடத்திலோ அல்லது தகப்பனுடைய இடத்திலோ அவளை அழைத்துச் சென்று அவளை விவாகம் பண்ணினான். சகோதரனே, கவனி, தயங்கி நிற்க நேரமில்லை. தீர்மானம் செய்ய வேண்டிய நேரம் இதுவே. இந்தச் செய்தியானது எம்மாதிரியான ஒரு தாக்கத்தை உன்னில் ஏற்படுத்தி உள்ளது-? “நான் போகிறேன். நான் எழுந்து இயேசுவிடம் போகிறேன். அவர் தம்முடைய கரங்களினால் என்னை அணைத்துக் கொள்வார்,” என்று நீங்கள் கூற ஆயத்தமாயிருக்கிறீர்களா-? “என் நேச இரட்சகரின் கரங்களில், ஓ, அங்கே பத்தாயிரம் நாவுகள் இருக்கிறது,” என்று புலவன் கூறினான். 34. அவர் பழங்காலத்து பிலாத்துவுக்கு இருந்தது போலவே அப்படியே அவர் இன்றிரவும் உங்கள் கரங்களின் மேல் இருக்கிறார். நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதாகி விட்டது. அவருடைய தூதனானவர் அசைவாடுவதை நீங்கள் கண்டு, செய்தியானது வருகிறதைக் காணும் போது, இப்பொழுது நீங்கள் என்ன தீர்மானம் செய்வீர்கள்-? இயேசு சீக்கிரமாய் வருகிறார். தேவனுடைய தூதனானவர் இங்கே பூமியின் மேல் இருந்து கொண்டு ஊழியக்காரர்கள் முன்னே சென்று, அவர் செய்வாரென்று இயேசு சொன்னது போன்று அப்படியே அடையாளங்களையும் அற்புதங்களையும் நடப்பித்துக் கொண்டிருக்கிறார். அவர் இப்பொழுது இங்கிருக்கிறார். நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துகையில், உங்களுடைய தீர்மானத்தைச் செய்து கொண்டு அவரிடம் வாருங்கள். இப்பொழுது இங்கேயுள்ள எத்தனை பேர் தங்கள் தலைகளை வணங்கினவர்களாய், தேவனுடைய உண்மையான ஊழியக்காரராகிய மகத்தான பரிசுத்த ஆவியானவர் உங்கள் இருதயத்தைத் தட்டிக் கொண்டு... என்று கூறிக் கொண்டிருக்கிறார்-? “ஓ, நான் என்னுடைய ஸ்தாபனத்தின் பேரிலும், என்னுடைய சகோதரர்கள் பேரிலும் முழுவதுமாக சார்ந்திருக்கலாம், ஆனால் நான் இன்றிரவு என்னிடமிருக்கிற எல்லாவற்றைக் கொண்டும் இயேசுவிடம் போக விரும்புகிறேன். நான் சற்றே இயற்கைக்கு மேம்பட்டவைகளுக்கு விரோதமாக எண்ணி விட்டேன். நான் தூதர்களைக் குறித்து வியந்து கொண்டிருக்கிறேன். ஆனால், ஓ, இப்பொழுது செய்தியானது அப்படியே என்னுடைய இருதயத்தில் ஏதோவொன்றை செய்திருக்கிறது. செய்தியானது சரி என்று என்னிடம் கூறுகிற ஏதோவொன்று எனக்குள்ளாக பாய்ந்து செல்வதை நான் உணருகிறேன். நான் நாளை வரை காத்திருக்க மாட்டேன்; நான் நீண்ட காலம் காத்திருக்கப் போவதில்லை. இதுவே என்னுடைய தீர்மானத்தின் நேரமாக உள்ளது.” உங்கள் தலைகளைத் தாழ்த்தினவாறு, கண்களை மூடிக் கொண்டு, இந்தப் பெரிய சபையில் எத்தனை பேர் உங்கள் கரங்களை உயர்த்திக் கொண்டு, “நான் என்னுடைய தீர்மானத்தைச் செய்வேன். அது கடினமாக இருக்கலாம் அல்லது எளிதாக இருக்கலாம்; பரிசுத்த உருளையன் என்று அழைக்கப்படும்படியாக கருதப்படலாம், மதவெறியன் என்றோ அல்லது மதரீதியாக பித்துப் பிடித்தவன் என்றோ அழைக்கப்படும்படி அது கருதப்படலாம்; நான் கர்த்தராகிய இயேசுவை சந்திக்கும்படி இன்றிரவு என்னுடைய தீர்மானத்தைச் செய்கிறேன். நான் செய்தியை விசுவாசிக்கிறேன். நான் ஜெபத்தில் நினைவு கூரப்பட விரும்புகிறேன்,” என்று கூறுங்கள். உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். தேவன் உங்கள் தீரமான ஆத்துமாக்களை ஆசீர்வதிப்பாராக. இந்தக் கட்டிடத்தில் தங்கள் கரங்களை உயர்த்தினவர்கள் ஏறக்குறைய இரண்டு டஜன் பேர் என்று நான் நினைக்கிறேன். 35. ஓ கர்த்தாவே, நீர் அவர்களைக் காண்கிறீர், நீர் அவர்களை அறிந்திருக்கிறீர். இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் தாமே சில்லென்ற புத்துணர்ச்சி வருகிற ஜீவத் தண்ணீர்கள் அண்டைக்கு ரெபேக்காளைக் கொண்டு செல்வாராக. தேவ பிரசன்னமானது அவர்களுடைய இருதயங்களையும், ஆத்துமாக்களையும் கழுவி, புதிய ஜீவியத்திற்கும் புது நம்பிக்கைக்கும் அவர்களைக் கொண்டு வருவாராக. செய்திக்கு முன்பாக அனுப்பப்பட்டிருக்கிற தேவனுடைய தூதனானவர் தாமே விலையேறப் பெற்ற கிறிஸ்துவினாலே கிரயம் கொடுத்து வாங்கப்பட்டிருக்கிற இரத்த சம்பந்தமான உறவின் முறையாரிடம் பேசுவாராக. கர்த்தாவே, உயர்த்தப்பட்டு இருக்கிற இந்த எல்லா கரங்களும், அவர்கள் இனிமையோடும் தாழ்மையோடும் இப்பொழுது தான் உம்மை ஏற்றுக் கொண்டு உள்ளனர், அவர்கள் தாமே ஒட்டகத்தின் மேலேறியிருந்து கொண்டு, தேவனுடைய வல்லமையானது அவர்களை எஜமானரின் சமுகத்திற்கு முதுகில் சுமந்து கொண்டு செல்வதாக. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நல்ல வெகுமதிகள் ஒவ்வொன்றும் அவர்களிடம் வருவதாக. அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, நற்குணம், சாந்தம், தயவு, பொறுமை, விசுவாசம் ஆகிய வெகுமதிகள் தேவனுடைய மகத்தான பொக்கிஷ வீட்டிலிருந்து அவர்களுக்கு அருளப்படுவதாக, வருகிறவர்களுக்கு எல்லாமே இலவசம் தான் என்று நீர் வாக்குப் பண்ணியிருக்கிறீர். கர்த்தாவே, அவர்கள் தங்களுடைய தீர்மானத்தைக் கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் கரத்தை உயர்த்தினார்கள். அவர்கள் இன்றிரவு தங்களுடைய சிந்தைகளை நேராக்கி உள்ளனர். இரத்தத்தினால் கழுவப்பட்டவர்களிடம் நீர் பேச முடியும். கர்த்தாவே, நீர் அவர்களை அறிந்திருக்கிறீர். சபையானது இயேசுவை ஆகாயத்தில் சந்திக்கும், அந்த சந்திக்கும் நேரத்தில், நாங்கள் அவர்களை உம்மிடம் அடைக்கலமாக ஒப்புக் கொடுக்கிறோம்... அவர் ஏற்கனவே பிதாவின் வீட்டை விட்டுப் புறப்பட்டு, பூமிக்கு வருகிற தம்முடைய பாதையில் இருக்கிறார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். அவர் எட்டாத இடத்திலுள்ள மகத்தான வயல்வெளியில் தியானம் செய்து கொண்டு இருக்கிறார். மணவாட்டி தன்னை ஆயத்தம் பண்ணிக் கொண்டு இருக்கிறாள். அவள் சீக்கிரத்தில் தன்னுடைய பாதையில் இருப்பாள். நாங்கள் கர்த்தரை ஆகாயத்தில் சந்திப்போம் என்று வேத வாக்கியம் கூறுகிறது. அவர் ஏற்கனவே புறப்பட்டு தம்முடைய மணவாட்டியின் பின்னால் வந்து கொண்டு இருக்கிறார். நாங்கள் ஆயத்தமாய் இருப்போமாக, இது ஒருக்கால் கடைசி அழைப்பாக இருக்கலாம். சாயங்கால வேளை இங்கு உள்ளது. கர்த்தாவே, நான் அவர்களை உம்முடைய கரங்களுக்குள்ளும் உம்முடைய பாதுகாப்பிற்குள்ளும் ஒப்படைக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் வழியாக நாங்கள் அதைக் கேட்டு, செய்தியின் சின்னங்களாக உமக்குக் கொடுக்கிறோம். ஆமென். 36. வேதனைக்கும் அவமானத்துக்குமுரிய உமது சின்னமாகிய, அந்தப் பழைய சிலுவையை நான் நேசிக்கிறேன், நேசரும் நல்லவருமாகிய நீர், அங்கே இழக்கப்பட்ட பாவிகளின் உலகத்திற்காக மரித்தீர். எனவே இறுதியில் எனது வெற்றிப்பதக்கங்களை நான் சமர்ப்பிக்குமளவும், கரடுமுரடான அந்தப் பழைய சிலுவையை நான் மனதார நேசிப்பேன்; அந்தப் பழைய கரடுமுரடான சிலுவையை நான் பற்றிக்கொண்டு, ஏதோவொரு நாளில் இதைக் கொடுத்து விட்டு ஒரு கிரீடத்தை வாங்கிக் கொள்வேன். கரடுமுரடான அந்தப் பழைய சிலுவைக்கு நான் எப்போதும் உண்மையாயிருப்பேன், அதனுடைய அவமானத்தையும் நிந்தையையும் சந்தோஷத்தோடு சகிக்கிறேன்; அதன் பிறகு மிகத் தூரமாக இருக்கும் எனது வீட்டிற்கு அவர் ஏதோவொரு நாளில் என்னை அழைப்பார், (தேவனுக்கு ஸ்தோத்திரம்) அங்கே என்றென்றுமாய் அவருடைய மகிமையில் நான்... நீங்கள் அதை உளமார கூறுகிறீர்களா-? நீங்கள் அதைப் பாடிக் கொண்டிருக்கையில், உங்கள் கரத்தை மேலே உயர்த்துங்கள். எனவே இறுதியில் எனது வெற்றிப்பதக்கங்களை நான் சமர்ப்பிக்குமளவும், கரடுமுரடான அந்தப் பழைய சிலுவையை நான் மனதார நேசிப்பேன்; அந்தப் பழைய கரடுமுரடான சிலுவையை நான் பற்றிக்கொண்டு, ஏதோவொரு நாளில் இதைக் கொடுத்து விட்டு ஒரு கிரீடத்தை வாங்கிக் கொள்வேன். ஓ, நான் எவ்வளவாய் அவரை நேசிக்கிறேன். ஓ, அவருடைய நன்மையானவைகளில் உங்களுடைய ஆத்துமாக்கள் அப்படியே மூழ்குவதாக. கர்த்தருடைய தூதனானவர் இங்கேயிருக்கிறார். முடிவிலே... அந்தப் பழைய கரடுமுரடான சிலுவையை நான் பற்றிக்கொண்டு, (வேறு எதுவாகயிருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல.) ஏதோவொரு...-?... அதை மாற்றிக்கொள்வேன். 37. அது எவ்வளவு மகத்தானதென்று நீங்கள் எப்பொழுதாகிலும் எண்ணினதுண்டா-? இந்த குழப்பத்தின் நாளிலே, ஜனங்கள் என்ன செய்வதென்றோ, எந்த வழியில் போவதென்றோ அறியாமல் இருக்கும் இந்நாளில் இதற்கு மாற்றாக உங்களால் என்ன கொடுக்க முடியும்-? ''இந்த நாட்கள் வருமென்றும், தேசத்தில் ஒரு பஞ்சம் வருமென்றும், அப்பத்திற்காகவோ தண்ணீருக்காகவோ உண்டான பஞ்சம் அல்ல என்றும், தேவனுடைய உண்மையான வார்த்தை கேட்கக் கிடையாத பஞ்சமாக அது இருக்கும்,'' என்றும் வேதாகமம் கூறுகிறது. தேவனுடைய உண்மையான வார்த்தையைக் கேட்கும்படிக்கு கிழக்கிலிருந்து மேற்கு வரைக்கும், வடக்கிலிருந்து தெற்கு வரைக்குமாய் ஜனங்கள் தேடித் திரிவார்கள். நாமோ இன்றிரவு இங்கே தேவனுடைய தூதனானவரை, தேவனுடைய செய்தியை காணும்படியான சிலாக்கியம் பெற்றுள்ளோம். இங்கே எந்த ஜெப அட்டைகளும் கொடுக்கப்படவில்லை. கூட்டத்தில் ஏதாவது ஜெப அட்டைகள் உள்ளதா-? இல்லை. யாருமே ஒரு ஜெப அட்டையும் பெற்று இருக்கவில்லை. ஆனால் கர்த்தருடைய தூதனானவர் இங்கே இருக்கிறார். தேவன் தம்முடைய...-?... அனுப்புவாரானால். அதை உறுதிப்படுத்தும்படி தம்முடைய செய்தியை அனுப்புகிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? 38. இப்பொழுது இங்கேயிருக்கும் எல்லாருக்குமே என்னைத் தெரியாது, அல்லது எனக்கு உங்களையோ உங்களுக்கு வியாதியோ தேவையோ இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது என்பதை அறிந்திருக்கிறவர்கள் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். உங்களுக்குத் தேவை இருக்கிறது என்று எனக்கு எதுவுமே தெரியாது என்று அறிந்திருக்கிற எல்லாரும், அப்படியே உங்கள் கரங்களை உயர்த்துங்கள். உங்களுக்கு தேவன் அவசியமாயிருக்கிறார் என்றால், சற்று உங்கள் கரங்களை உயர்த்துங்கள். (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) அந்த யூத சகோதரன்... அல்லது அது சரியென்றால், மிஷிகனிலிருந்து வந்து இருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் தொடக்கத்தில் கடலுக்கு அப்பாலுள்ள எங்கோ ஓரிடத்திலிருந்து, சிபேரியாவிலிருந்து வந்தீர்கள். (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) செக்கோஸ்லோவேக்கியா. எனக்கு அவரைத் தெரியும். எனக்குத் தெரிந்தவர்களாக நான் பார்க்கிறவர்கள் ஏறக்குறைய இவ்வளவு பேர் தான். ஆனால் தேவன் இன்னுமாக தேவனாக இருப்பாரென்றால், தேவன் தம்முடைய செய்தியாளனோடு இன்னுமாக ஒரு தூதனை அனுப்புவாரென்றால், அந்த தூதனானவரே அது சத்தியம் என்று சாட்சி பகருவார். தேவன் இன்னும் தேவனாய் இருக்கிறார் என்று இன்றிரவு அறிந்து கொள்ளப்படட்டும். நான் என்னைக் குறித்துப் பேசிக் கொண்டு இருக்கவில்லை, ஆனால் அவரைக் குறித்தே பேசுகிறேன். நீங்கள் மணவாட்டியாக இருப்பீர்கள் என்றால், ரெபேக்காள்... 39. அவர், நம்முடைய பெலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக்கூடிய தொடப்படக்கூடிய பிரதான ஆசாரியனாய் இருக்கிறார் என்று வேதாகமம் கூறுகிறது. அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், அவர் தொடப்பட்ட போது, திரும்பி அந்த ஸ்திரீயினுடைய கோளாறுகள் என்னவென்று அவளிடம் கூற முடிந்தது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். பிதாவானவர் தம்முடைய பிள்ளைகளுக்கு அனுப்பியுள்ள நல்ல வெகுமதிகள் வேதாகமத்தில் உண்டு. இப்பொழுது, நீங்கள்... செய்தியாளனைக் கவனிக்க வேண்டாம், ஆனால் செய்தியை விசுவாசியுங்கள், அப்பொழுது தேவன் இன்றிரவு தமது வாக்குத்தத்தங்களை எடுத்து உங்களுக்கு அருளுவார்.(unload). இரட்சிப்பிற்காக உங்கள் கரத்தை உயர்த்தின உங்களுக்கு, அவைகள் எவ்வளவு நல்லதாக இருக்குமோ அவ்விதமே, வியாதிக்காக கரத்தை உயர்த்தின உங்களுக்கும் அவைகள் அவ்வளவு நல்லதாகவே இருக்கிறது. அவர், அப்படியே அதே தேவன் தான், அவர் எப்பொழுதும் கொண்டு இருந்த அதே வரங்கள் தான், அவர் அதே விதமாகவே கிரியை செய்து கொண்டிருக்கிறார். 40. இப்பொழுது ஜெபியுங்கள். விசுவாசியுங்கள். தேவனாகிய கர்த்தரே தீர்மானிக்கட்டும், அதன் பிறகு தேவனுடைய நித்திய வார்த்தையின் மேல் உங்கள் விசுவாசத்தை வையுங்கள். இன்றிரவு அவரை சேவிக்கும்படியாக உங்கள் தீர்மானத்தைச் செய்யுங்கள். தேவனாகிய கர்த்தர் இக்கட்டிடத்தில் குறைந்தது மூன்று பேரையாவது காட்டுவாராக... மூன்று என்பது ஒரு உறுதிப்பாடாக இருக்கிறது (அது போதுமா-?) அவர் தம்முடைய தூதனானவரை அனுப்பி உள்ளார் என்றும், நான் இக்காரியங்களை என் சுயமாய் பேசிக் கொண்டு இருக்கவில்லை என்றும், அது அவரே தான் என்பதற்கான உறுதிப்படுத்துதல். இந்நாளில், நீங்கள் தீர்மானம் செய்யவில்லை என்றால், நீங்கள் தாமே அவருக்காக தீர்மானம் செய்வீர்களாக. இங்கே. ஒரு சிறு பெண் தன்னுடைய கைக்குட்டையோடு இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்; அவள் தன்னுடைய கரத்தை விட்டு அதை வெளியே எடுக்கவே இல்லை, தன்னுடைய கரத்திலேயே வைத்துக் கொண்டிருக்கிறாள். அங்கே உட்கார்ந்து கொண்டு ஜெபித்துக் கொண்டிருக்கும் வாலிப பெண்ணே, நான் உனக்கு ஒரு அந்நியன் தானே-? உன்னுடைய கோளாறு என்னவென்று தேவனால் என்னிடம் கூற முடியும் என்று நீ விசுவாசிக்கிறாயா-? நீ ஒரு அறுவை சிகிச்சையை எதிர்நோக்கி இருக்கிறாய். அது சரி தான், இல்லையா-? அது சரி என்றால், உன் கரத்தை உயர்த்து. எனக்கு உன்னைத் தெரியாது. அது சரி என்றால், உன்னுடைய - உயர்த்து - இவ்விதமாக உன் கரத்தை வை. ஆனால் அது சத்தியம் தான், இல்லையா-? நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்-? உன்னுடைய தீர்மானத்தை நீ செய்து விட்டாயா-? சரி. அப்படியானால் அதனோடு தரித்திரு. 41. இங்கே ஒரு வயதான சீமாட்டி இவ்விதமாக கரங்களை வைத்துக் கொண்டு, சிகப்பு நிறமாகக் காணப்படும் ஆடையை உடுத்திக் கொண்டு சரியாக இங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கிறாள். நீங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களைச் சுகப்படுத்தும்படியாக நீங்கள் தேவனிடம் ஜெபித்துக் கொண்டு இருக்கிறீர்கள். எனக்கு உங்களைத் தெரியாது. தேவன் உங்களை அறிவார். நீங்கள் எதற்காக ஜெபித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதை கர்த்தர் என்னிடம் கூறுவாரானால், நீங்கள் அதை ஏற்றுக் கொண்டு அவருடைய தூதனானவர் உங்களை ஆசீர்வதிக்கும்படியாக உங்களிடம் வந்திருக்கிறார் என்று விசுவாசிப்பீர்களா-? அந்த ஒளி உங்களுக்கு மேலாக நிற்கிறது. கீல்வாதமும் நரம்புத் தளர்ச்சியும் உங்களுக்கு இருக்கிறது. அது சரியே, உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். சரி. நீங்கள் உங்களுடைய தீர்மானத்தைச் செய்து விட்டீர்களா-? சரி. வீட்டுக்குச் சென்று, எப்பொழுதாவது வியாதி இருந்தது என்பதைப் பற்றியே மறந்து விடுங்கள். இயேசு கிறிஸ்து உங்களைச் சுகப்படுத்துவார். ஒரு சிறிய சீமாட்டி இவ்விதமாய் கரங்களை உயர்த்தினவளாய் இங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிறதை நான் காண்கிறேன். அவள் ஜெபித்துக் கொண்டு இருக்கிறாள்; அவள் முண்டியடித்துக் கொண்டிருக்கிறாள். எனக்கு அவளைத் தெரியாது. சாம்பல் நிற... ஆனால் அவளுக்கு இருதயக் கோளாறு உள்ளது, அதற்காகத் தான் அவள் ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அது சரியே. அவளுக்கு அடுத்ததாக அவளுடைய சகோதரி உட்கார்ந்து கொண்டிருக்கிறாள், அவள் நரம்பு சம்பந்தமான கோளாறுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். சீமாட்டியே, அது சரி தான், இல்லையா. எனக்கு உன்னைத் தெரியாது. தேவன் உன்னை அறிவார். நீ இந்தப் பட்டணத்தில் இருந்து வரவில்லை, நீயும் அவ்வாறு தான். நீ இல்லியாயிலிருந்து வருகிறாய், என்றாலும் டான்வில்லிலிருந்து. அது சரி தான். உன்னுடைய பெயர் போ-க் (P-o-g-u-e). அது சரி தான். வீட்டிற்குச் சென்று, உனக்கான பதிலைப் பெற்றுக் கொள். தேவன் உன்னுடைய... இரண்டையும் உனக்குக் கொடுக்கிறார்... அப்படியே விசுவாசத்தைக் கொண்டிரு. 42. இங்கே சரியாக என்னை நோக்கியவாறு உட்கார்ந்து கொண்டிருக்கிற பெண்ணே, அது உன்னை சிலிர்ப்பூட்டியதா-? நீ கட்டம் போட்டதாய் தோற்றமளிக்கிற ஒரு சிறு இளஞ்சிவப்பு நிற ஆடையை அணிந்து கொண்டு புன்சிரிப்பு செய்வதை நான் கண்டேன். நான் சுற்றும் முற்றும் திரும்பின போது, கர்த்தருடைய தூதனானவர் இங்கே நின்று கொண்டு இருந்தார். நீ கால்களில் இருக்கிற கோளாறினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாய். கூடவே காச நோய்க்காக நீ ஜெபித்துக் கொண்டிருக்கிற ஒரு சிநேகிதியும் உனக்குண்டு. அது சரி தான், இல்லையா. அது சரி என்றால், உன்னுடைய கரத்தை உயர்த்து. ஆமென். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? கர்த்தருடைய தூதனானவரை.., நான் அறிந்திராத வேறு யாரோ ஒருவர் உங்கள் கரத்தை உயர்த்துகிறீர்கள், தேவன் உங்களுக்கு உதவி செய்யும்படி நீங்கள் விரும்புகிறீர்கள். அது ஒவ்வொரு இடத்திலும் உள்ளது. அது... அது மூன்று பேரைக் காட்டிலும் அதிகமாய் இருக்கிறது, இல்லையா. சரி. அது அதை நம்பும்படி செய்தாக வேண்டும். தேவன் இங்கே இருக்கிறார். தேவன் உங்கள் எல்லாரையும் நேசிக்கிறார். 43. நான் இதைச் சொல்லுவதிலிருந்து என்னால் விலகியிருக்க முடியவில்லை. இங்கே நம்பிக்கை இழந்த நிலையில் தேவையோடு உட்கார்ந்து கொண்டிருக்கிற ஒரு சீமாட்டி இருக்கிறார்கள். அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். என்னால் முடியாது... அந்த ஒளியானது அந்தப் பெண்மணியின் மேல் நின்று கொண்டிருக்கிறது. அவர் உங்களுக்கு உதவி செய்வார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? நீங்கள் இங்கே இந்த இரண்டில் ஒன்றிலிருந்து வரவில்லை. நீங்கள் ஐயோவா-விலிருந்து வருகிறீர்கள், ஐயோவாவிலுள்ள டெஸ்-மாயின்ஸ் என்ற இடத்தில் இருந்து. அவர் உங்களைச் சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? உங்களுக்கு சைனஸ் பிரச்சனை உள்ளது. அது உண்மை. நீங்கள் விட்டு விட விரும்புகிற ஒரு பழக்கம் உமக்கு உண்டு - அது தான் புகை பிடித்தல். நீங்கள் அதை விட்டு விடுவீர்களா-? அப்படியானால் உங்கள் கரங்களை உயர்த்தி, “கர்த்தாவே, நான் அதை விட்டு விடுகிறேன்,” என்று கூறுங்கள். சரி, வீட்டிற்குப் போங்கள். இனி மேலும் நீங்கள் புகை பிடிக்க வேண்டாம், உங்கள் சைனஸ் பிரச்சனை தீர்ந்து விட்டது, ஏனென்றால் உங்கள் விசுவாசமே உங்களைச் சுகமாக்கிற்று. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, விசுவாசித்துக் கொண்டே இருங்கள். 44. நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா-? கர்த்தருடைய தூதனானவர் எப்பொழுதும் செய்தியுடனே கூட போகிறார். அவர் தேவன் என்று நீங்கள் உங்கள் தீர்மானத்தைச் செய்திருக்கிறீர்களா-? அப்படியானால் உங்கள் கரங்களை ஒருவர் மற்றவர் மேல் வையுங்கள். நாளை இரவு வரை நீங்கள் காத்து இருக்க வேண்டியதில்லை; அது இன்றிரவாகவே இருக்கட்டும். பரிசுத்த ஆவியானவர் சில நிமிடங்களுக்கு முன்பு என்னிடம் பேசின போது, நான் நாளை இரவு மட்டும் காத்திருக்கவில்லை; இன்றிரவே சுகமளித்தலுக்கான இரவாக இருந்தது. இன்றிரவே மன்னிக்கப்படுதலுக்கான இரவாக இருக்கிறது. ஒருவர் மற்றவர் மேல் உங்கள் கரங்களை வையுங்கள். இயேசு இங்கே இருக்கும் தம்முடைய செய்தியில் தேவ வல்லமையோடு உள்ள தேவனுடைய வார்த்தையாக இருக்கிறார், நான் உங்களுக்காக ஒரு செய்தியைப் பெற்றுக் கொண்டேன். இங்கே, நான் அதை அந்த பையை (Satchel) விட்டு வெளியே எடுக்கப் போகிறேன்: “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்.” ரெபேக்காளே, அது உன்னுடையது. அது என்ன கூறுகிறது-? “அவர்கள் வியாதியஸ்தர்கள் மேல் தங்கள் கைகளை வைப்பார்களானால், அப்பொழுது அவர்கள் சொஸ்தமடைவார்கள்.” ரெபேக்காளே, நீ அதை விசுவாசிக்கிறாயா-? நல்லது, இதோ அந்த வெகுமதி வருகிறது; அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அது தான் அது. அல்லேலூயா. ஜெபியுங்கள். தேவனாகிய கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஒவ்வொரு பிசாசையும் கடிந்து கொண்டு, சகல வியாதியையும் துரத்தி, எங்களுடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக ஒவ்வொரு நபரும் சுகமடையட்டும்…